மதுரை : ""மதுரை மாவட்டத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதால், துணி, காகித பைகளை வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்,'' என கலெக்டர் காமராஜ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:பொருட்களை விற்பனை செய்பவர்கள் பிளாஸ்டிக் கைப்பை மற்றும் கலன் மூலம் உணவுப் பொருட்களை அடைத்து வைப்பது, எடுத்துச் செல்வது, சேமித்து வைப்பது சட்டப்படி குற்றம்.
எடுத்துச் செல்லும் கைப் பைகள் 8*12 என்ற அளவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யவேண்டும். குறைந்தபட்ச தடிமனாக 20 மைக்ரான் அளவு இருக்க வேண்டும். 20 மைக்ரான் அளவு இல்லாத பிளாஸ்டிக் கப், கேரி பேக் முதலிய பொருட்கள் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் மதுரை மாவட்டத்தில் இன்று முதல் தடை செய்யப்படுகிறது.
இதற்கு மாற்றாக துணிப்பை, காகிதப்பை, கோப்பைகள், கப், பாக்கு மட்டை தட்டுகள், தென்னை, பனை ஓலை கூடைகள் பயன்படுத்த வேண்டும். அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
http://www.dinamalar.com
பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2011,02:18 IST
No comments:
Post a Comment